கடற்கரும்புலிகள் மேஜர் ஜெகநாதன், கப்டன் இளையவள் வீரவணக்க நாள்

0

கடற்கரும்புலி மேஜர் ஜெகநாதன், கடற்கரும்புலி கப்டன் இளையவள் வீரவணக்க நாள் இன்றாகும்.

யாழ் மாவட்டம் காங்கேசன்துறைத் துறைமுகத்திலிருந்து திருகோணமலை துறைமுகத்தை நோக்கி 30.03.1996 அன்று ரோந்து சென்ற சிறிலங்கா கடற்படையின் கடற்கலம் கொண்ட அணியினரை யாழ் மாவட்டம் சுண்டிக்குளக் கடற்பரப்பில் வழிமறித்து சிறிலங்கா கடற்படை அணியின் அதிவேக டோறாப் பீரங்கிக் கலம் மூழ்கடித்த கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி மேஜர் ஜெகநாதன், கடற்கரும்புலி கப்டன் இளையவள் ஆகிய கடற்கரும்புலி மாவீரர்களின் 23 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

இவர்களுடன் இந்த வெற்றிகர கடற்சமரில் லெப். கேணல் குணேஸ் (எழில்வண்ணன்), லெப். கேணல் நிமல் உட்பட பதினெட்டு கடற்புலிப் போராளிகளும் கடலிலே காவியம் படைத்தனர்.

வெற்றிகளுக்கு வித்திட்டு கடலன்னை மடியில் உறங்கும் உயிராயுதங்கள்.!

 

தாயக விடுதலை வேள்வி தன்னில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த மாவீரர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்

 

Leave A Reply

Your email address will not be published.