பயணம்.!

0

இரு கண்களும் என்னிடமுண்டு
ஆனாலும் உருவாகப் போகும்-ன்
தாயகத்தை நான் காணப்போவதில்லை

அன்பும் பாசமும் நிறைந்த
இளகிய நெஞ்சமும் என்னிடமுண்டு
ஆனாலும் இப்போது நான் அதை
இறுக்கிக்கொண்டு விட்டேன்


இந்தத்தேசத்தில் வாழ்பவர்களிற்கு
பாதுகாப்பு இல்லையென்பதால்
இந்தத் தேசத்தை விட்டு நான்
விலகிச் செல்கிறேன்

சின்னஞ்சிறு மலர்களே
விருட்சமாக முன்னர், கந்தகக்
காற்றுப்பட்டுநீங்கள்
கருகிவிடக்கூடாதென்பதற்கா
கந்தகத்தோடு நான்புறப்படுகிறேன்

மரங்களை எம் மண்னில்
விதைத்தவர்களிற்கு- என்
மரணத்தின் மூலம் மரண தண்டை
கொடுக்கப் போகின்றேன்

நான் உதிர்கின்ற போது
மலர்கின்ற வெப்பத்தில்
கருகிப் போகின்ற- பகைவனின்
உடல்களின் ஒளியில்தான்

 

ஆக்கம் :செந்தோழன் 

இதழ் வெளியீடு:எரிமலை இதழ் 

இணைய  வெளியீடு :வேர்கள் இணையம் 

தட்டச்சு:நிலராவணன்  (வேர்கள்  இணைய  தட்டச்சாளர் )

“புலிகளின் தாகம்  தமிழீழத் தாயகம்”

 

Leave A Reply

Your email address will not be published.