மாவீரர் நினைவாக .!

0
வாழ்க்கையை
விடுதலைப் போரினாலும்
மரணத்தை அஞ்சாத தியாகத்தாலும்
கடைசி வரைக்கும்
கனப்படுத்தி
பூமி கனக்கப்
புதைந்த புலிகளே!
காலத்தின் செவிகளில்
உமது கர்ச்சனை …..
யுகங்களின் நெற்றியில்
உமது திருப்பெயர் ….
நாளைய தமிழினப்
பிஞ்சு முகங்கள்
முகர்ந்து பார்க்கும்
ஒவ்வொரு பூவிலும்
உங்களின் உயிரின்
வாசம் கமழும் ….
நாளைய விடியலை
ஈழத்தில் எழுத
நீளும் கதிர்கள்
நிச்சயம் உமது
உயிரின் சூடும்
ஒன்றியிருக்கும் .
காலியான சயனைட் குப்பிகளும்
கனன்று கிடக்கும் தோள் துப்பாக்கிகளும்
இன்னும் உலராத இளைய ரத்தமும்
அனைத்திலும் மேலாய்
உம் வாழவும மரணமும்
விடுதலை வரித்த
அடையாளங்களாய்
வரலாற்று வரிகளில்
கனத்துக் கிடக்கும்
ரத்த சாட்சிகளே
வீரவணக்கம்
வெளியீடு :எரிமலை இதழ் 1994
மீள் வெளியீடு :வேர்கள் இணையம் 2018
இணைய தட்டச்சு :கலை வதனி (வேர்கள் இணையம்)

Leave A Reply

Your email address will not be published.